தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு !

Tn news: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனர்
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனர்

கரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தை தாக்கி வருகிறது.பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு மே 24 வரை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிய தகவல்,தென்கிழக்கு அரபிக் கடலில் 14ஆம் தேதி, காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புயல் உருவானால் வடமேற்குப் பகுதியில் நகர்ந்து, கிழக்கு மத்திய அரபிக் கடலில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தென் தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.