5 பவுன் வரையிலான கூட்டுறவு நகைகடன், தகுதியானவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக பகுப்பாய்புகள் நடத்தப்பட்டதாகவும், அதன்படி 51 தரவுகள் சேகரிக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் தகுதியானர்களுக்கு 5 சவரன் வரை கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு 2021 மார்ச் 31 ஆம் தேதிவரை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரே குடும்பத்தில் அதிகமானோர் அடகு வைத்திருந்தால் களையப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு: சட்ட மசோதா தாக்கல் செய்தார் ஸ்டாலின்



