நீட் தேர்வு: சட்ட மசோதா தாக்கல் செய்தார் ஸ்டாலின்

இன்று கூட்டத்தெதொடரில் நீட் தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இருவரிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினமே அறிவித்திருந்தார் . அதையொட்டி, இன்று கூட்டத்தெதொடரில் நீட் விலக்கு தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இருவரிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

விவாதத்தின்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் `ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கூட நீட் தேர்வு கொண்டுவரப்படவில்லை’ எனப் பேசினார். அதன்பிறகு நீட் குறித்த விவாதத்துக்குப் பிறகு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “வாணியம்பாடியில் மஜக நிர்வாகி கொலை விவகாரம், மாணவர் தனுஷ் தற்கொலை குறித்தும் பேரவையில் பேச முயன்றேன். திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சொல்லியிருந்தார். உச்சநீதிமன்றம் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்துவிட்டது. உச்சநீதிமன்றம் சொல்லிய பிறகும் மாணவர்களையும் பெற்றோர்களையும் வேண்டுமென்றே திமுக அரசு குழப்புகிறது” எனக் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் விராட் கோலி