தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை

காற்றுமாசு அதிகரிப்பதை தடுக்கும் வகையில், டில்லியில் இந்த ஆண்டும் தீபாவளியன்று பட்டாசு விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும், வெடிக்கவும் தடை செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளதாவது: கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளியை தொடர்ந்து ஏற்பட்ட காற்று மாசுவை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும், தீபாவளி பண்டிகை காலத்தில் அனைத்து வகை பட்டாசுகளை சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், வெடிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இதன் மூலம், மக்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, பட்டாசுகளுக்கு தடை விதிக்கும் முடிவு காலதாமதமாக அறிவிக்கப்பட்டது. இதனால், பட்டாசு வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. எனவே, இந்த ஆண்டு, பட்டாசுகளை சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ வேண்டாம் என, அனைத்து வியாபாரிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: நீட் மதிப்பெண் குறையும் என அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை