சத்தீஸ்கரில் தடுப்பூசி போடவில்லையென்றால் ஊதியம் கிடையாது !

இன்று முதல் செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசி

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.சத்தீஸ்கரில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பழங்குடியினர் நலத் துறை அறிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் கவ்ரேலா-பேந்த்ரா-மர்வாஹி மாவட்ட பழங்குடியினர் நலத் துறை உதவி ஆணையர் கே.எஸ்.மாஸ்ரம் கடந்த 21-ம் தேதி ஒரு உத்தரவைபிறப்பித்தார்.

அதில் அவர்,மாவட்டபழங்குடியினர் நலத் துறையின்கீழ் இயங்கும் அலுவலகங்கள், விடுதிகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களுக்கு அடுத்த மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இதுவரை 95 சதவீத ஊழியர்கள்தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.