ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு பிரிட்டனில் அனுமதி கிடைத்துள்ளது !

Vials labelled "COVID-19 Coronavirus Vaccine" and sryinge are seen in front of displayed Johnson&Johnson logo in this illustration taken, February 9, 2021. REUTERS/Dado Ruvic/Illustration

கரோனா தொற்று தடுக்க தடுப்பூசி எடுத்துக்கொள்ளுவதே சிறந்த வழி. கரோனா தடுப்பூசியை வேகமாகச் செலுத்தும் பணியை பிரிட்டன் அரசு முன்னெடுத்துள்ளது.

பிரிட்டனில் அஸ்ட்ராஜெனகா, பைஸர், மாடர்னா ஆகிய கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுத்த நிலையில், தற்போது ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஒரு டோஸ் (ஜான்சன் & ஜான்சன்) தடுப்பூசிகள் வைரஸிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.

எனவே ஒரே டோஸ் தடுப்பூசியான ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியைச் செலுத்துவதற்கான அனுமதியை பிரிட்டன் வழங்கியுள்ளது.