யூ-ட்யூப் தளத்தில் சாதனை படைத்த சிவகார்த்திகேயன் பாடல்!

டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ’செல்லம்மா’ பாடல் யூ-ட்யூப் தளத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

‘ஹீரோ’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ’டாக்டர்’ திரைப்படத்தில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ’செல்லம்மா’ பாடல் தற்போது யூ-ட்யூப் தளத்தில்5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.அனிருத் இப்பாடலை பாடியுள்ளார். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.