இந்தியாவில் தொடர்ந்து குறையும் கரோனா பாதிப்பு!!!

இந்தியாவில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.52%. குணமடைந்தோர் விகிதம் 88.03 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று சமீப நாட்களாக குறைந்து வருகிறது. அதே நேரம் தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.

எனினும் இந்த தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கி அனைத்து மக்களையும் பாதுகாப்பதே அரசின் குறிக்கோளாக உள்ளது. அந்த வகையில் தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகளை மத்திய அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.