புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு !

Tn news: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனர்
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனர்

வங்கக்கடலில் உருவாகியுள்ள தாக் டே புயல் காரணமாக கேரளா, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை கொட்டியது. இதனிடையே மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

உள் மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.