சென்னை வந்தடைந்த ஆக்சிஜன் ரயில் !

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து அண்டை மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் ஆக்சிஜன் வரவழைக்கப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலம், துர்காபூரில் இருந்து, நேற்று அதிகாலை சென்னை, தண்டையார்பேட்டை, கான்கார்ட் ரயில்வே யார்டிற்கு வந்த, முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை, சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன், அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கைதட்டி வரவேற்றனர்.

டேங்கர் ஒன்றில், 20 டன் வீதம், நான்கு டேங்கர்களில், 80 டன் ஆக்சிஜன் வந்துள்ளது. அவை, ‘ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ்’ நிறுவனத்தின், நான்கு கன்டெய்னர் லாரிகளில் மாற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.