Heavy rain in 10 district: தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு !

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.heavy rain in 10 district

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், அதனை ஒட்டி உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.