omicron variant: குழந்தைகளுக்கு பரவும் ஒமைக்ரான் !

omicron cases in india : 4000 தொட்ட omicron பாதிப்பு
4000 தொட்ட omicron பாதிப்பு

புதிய கொரோனா மாறுபாடான ஓமிக்ரான் மாறுபாட்டைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.பல ஐரோப்பிய நாடுகள் மிகவும் தொற்றுநோயான புதிய கொரோனா வைரஸ் தொற்றை உறுதிசெய்துள்ளன.

கடந்த 14 நாட்களில் தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, நமீபியா, ஜிம்பாப்வே, லெசோதோ, மொசாம்பிக், ஈஸ்வதினி அல்லது நைஜீரியாவில் இருந்தவர்களை இந்தோனேசியா அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளனர்.

ஓமிக்ரான் கோவிட்-19 மாறுபாடு, கொரோனா வைரஸின் மிக மோசமான ஒன்று என்று தெரிவித்துள்ளனர்.இது தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்று தெரிவித்துள்ளனர்.COVID-19 இன் பீட்டா மாறுபாட்டில் காணப்படும் தடுப்பூசி-எதிர்ப்பு மாற்றங்களையும் Omicron மாறுபாடு உள்ளடக்கியது.

ஒமைக்ரான் திரிபு தற்போது 38 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் 11 மாகணங்களில் ஒமைக்ரான் பரவல் உள்ளது.

இந்த நிலையில், தென் ஆப்ரிக்காவில் குழந்தைகளுக்கு ஒமைக்ரான் கொரானா திரிபு அதிக அளவில் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.