beauty tips: பளபளப்பான சருமம் பெற சில டிப்ஸ் !

பொலிவான மற்றும் வழவழப்பான சருமம் அனைவர்க்கும் பிடித்த ஒன்று.இதை நாம் வீட்டிலிருந்தே பெறலாம்.முதலில் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க நாம் உருளைக்கிழங்கை பயன்படுத்தவேண்டும்.

உருளைக்கிழங்கு சாறு எடுத்த முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவேண்டும்.இதன் மூலம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்.

அடுத்தது பேஸ் பேக்,இதற்கு தேவையானது 2 ஸ்பூன் முல்தானி மெட்டி ,சிறிதளவு பட்டை பொடி எடுத்துக்கொள்ளவும்.அடுத்து ஒரு 4 பன்னீர் ரோஜா,4 சம்மங்கி பூ இதை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் சுடுதண்ணீரை ஊற்றவும் ஒரு 5 நிமிடம் கழித்து அந்த பூக்களில் எசென்ஸ் அதில் இறங்கியபிறகு அந்த தண்ணீரை முல்தானி மெட்டி கலவையுடன் கலக்கவும்.tips to get flawless skin

இந்த பேஸ் பேக் போட்டு 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.இந்த பேக் உங்களுக்கு பொலிவான சருமத்தை தரும்.வாழைப்பழ ஃபேஸ் பேக் மிகவும் பயனுள்ள மற்றும் ஈரப்பதமூட்டும் ஃபேஸ் பேக் ஆகும். ஒரு வாழைப்பழம், 1 டேபிள் ஸ்பூன் தேன், கால் டீஸ்பூன் கிரீம் அல்லது பால் பவுடர் மற்றும் 2 சொட்டு சந்தன எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இந்த பொருட்களை நன்கு கலந்து உங்கள் முகத்தில் தடவவும். 20 நிமிடங்களுக்கு அதை வைத்து, பின்னர் துவைக்க மற்றும் இறுதியில் ஒரு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.