தமிழக மக்களே உஷார்..10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் !

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீலகிரி,கோவை,கள்ளக்குறிச்சி,வேலூர்,திருவண்ணாமலை,புதுக்கோட்டை,நாகை ,ராணிப்பேட்டை,திருவாரூர்,தஞ்சாவூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்னும் இரண்டு நாட்களில் நீலகிரி மற்றும் கோவை ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.