தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக அதிக தொற்று பரவியது.இதனை தடுக்க தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.மேலும் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

குறைந்து வந்த தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.கோவை, சென்னை, திருப்பூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்திலும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் தேநீர் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவைகளுடன் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களும் காலை 6 மணி முதல் 5 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஜவுளி கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமையில் செயல்பட அனுமதி இல்லை. பூ, பழம், காய்கறி உள்ளிட்ட கடைகள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.