ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனா தொற்றால் உயிரிழப்பு

கொரோனா நோய்த்தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி காலமானார்.

கொரோனா நோய்த்தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடிகாலமானார். இந்த மாத தொடக்கத்தில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு கொரோனாவுக்கான அறிகுறியில்லை என்று கூறப்பட்டது.

மத்திய இணையமைச்சரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.

கர்நாடகாவின் பெலகாவி மக்களைவைத் தொகுதி உறுப்பினர் சுரேஷ் அங்கடி. 65 வயதான மத்திய இணையமைச்சர் உடல்நலக் கோளாறால் ஒரு வாரத்திற்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு மத்திய அமைச்சர் ஒருவர் பலியானது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.