அறிமுகமாகும் புதிய வாகன பதிவு எண் !

ஒரு வாகனம் வாகும் பொது அந்தந்த மாநிலங்களுக்கு தகுந்தாற் போல் வாகன பதிவு செய்யப்படும்.மேலும் தமிழ்நாடு என்றல் TN ,கேரளா கர்நாடகா என்றால் KA என்று இருக்கும்.

மேலும் பதிவு செய்யப்பட்ட மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு செல்லும் போது வாகன பதிவை மாற்ற வேண்டும்.இதில் நிறைய சிரமம் இருக்கும்.இதனால் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் போது BH பதிவு அடையாளத்தைக் கொண்ட ஒரு வாகனத்திற்கு, புதிய பதிவு அடையாளத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் படி, பாரத் தொடர் (Bharat series) இன் கீழ் இந்த வாகன பதிவு வசதி, தன்னார்வ அடிப்படையில் பாதுகாப்பு பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோருக்கு பொருந்தும்.

இந்தப் பதிவின் கீழ் மோட்டார் வாகன வரி, இரண்டு வருடங்களுக்கு அல்லது இரண்டு மடங்காக விதிக்கப்படும்.