இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பவினா படேல் !

டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார் பவினா படேல்.டோக்கியோ நகரில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் இருந்து 54 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.மகளிருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் அரையிறுதிப் போட்டி கிளாஸ் 4 பிரிவில் இந்தியாவின் பவினாபென் ஹஸ்முக்பாய் படேல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் வகுப்பு 4-ன் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் 3-2 என்ற கோல் கணக்கில் உலகின் 3-வது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் மியாவோவை வீழ்த்தினார்.

7-11 முதல் ஆட்டத்தை இழந்த பிறகு, பாவினா, ரியோ பாராலிம்பிக் விளையாட்டு வெள்ளிப் பதக்கம் வென்ற மியாவோவை 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 இல் தோற்கடிக்க அற்புதமாக போராடினார்.இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.இதில் வெற்றி பெற்றால் தங்கம், இல்லாவிட்டால் வெள்ளிப் பதக்கம் உறுதி.