மைசூரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் !

Father kills his daughters auto driver who killed his daughters surrendered to police

இந்தியாவில் பெண்கள் அணைத்து துறைகளிலும் பணிபுரிகின்றனர் என்பது ஒரு பக்கம் இருக்க பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் நடைபெற்று தான் வருகிறது.

தற்போது மைசூரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.இந்த செய்தி அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.அந்த பெண் அவருடன் படிக்கும் காதலரும் காரில் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்திற்கு சென்றிருக்கின்றனர்.

அங்கு வந்த 6 பேர் திடீரென்று வந்து காதலனை தாக்கிவிட்டு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.தற்போது இந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் நடத்திவருகின்றனர்.குற்றவாளிகளை பிடிக்க சிறப்புக்குழு அமைத்திருப்பதாக கர்நாடக மாநில முதல்வர் தெரிவித்திருந்தார்.மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பேசிய பெண் போலீஸ் அதிகாரிக்கு அதிக தகவல் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண் இன்று வரை போலீசில் எந்த புகாரும் அளிக்கவில்லை, மேலும் தனது சொந்த ஊரான மும்பைக்கு செல்ல விரும்புகிறார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கைத் தொடர தனக்கு ஆர்வம் இல்லை என்றும், சம்பவம் குறித்து அதிக விவரங்களை அளிக்க முடியாது என்றும் போலீசாரிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது.