நடிகை வனிதா விஜயகுமாரின் புதிய ஷோ !

நடிகை வனிதா விஜயகுமார் சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குபவர்.மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் போடும் வீடியோ அனைத்தும் வைரல் ஆகும்.விஜய் டிவி யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.தற்போது தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் வனிதா, பிபிஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டையிட்டு விலகியது மீண்டும் சர்ச்சையை உருவாக்கியது.மேலும் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியான ‘கன்னித்தீவு – உல்லாச உலகம் 2.0’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இவர் விஜய் டிவி ஐ விட்டு விட்டு கலர்ஸ் தமிழ் செல்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.