ஒன்றிய அரசு என்று அழைக்க தடை இல்லை !

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கத் தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது திமுக. திமுக அரசு, மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என அழைத்து வருகிறது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இது பிரிவினையை உண்டாக்கும் என்று கூறுகின்றனர்.

மேலும் பழனியைச் சேர்ந்த ராமசாமி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் அவர் கூறுவது,மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில், இப்படித்தான் ஒருவர் பேச வேண்டும் என எவ்வாறு உத்தரவிட முடியும் என்று கேள்வி எழுப்பியது.

மேலும் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது சமூக குற்றமில்லை. மாநில முதல்வரும், அமைச்சர்களும் இப்படித்தான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.