அதிகரிக்க தொடங்கும் டெல்டா வகை கொரோனா எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

.இந்நிலையில்,டெல்டா வகை கொரோனா பிரிந்து டெல்டா பிளஸ் வகையாக மாறியுள்ளது.உலக நாடுகள் பலவற்றில் இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை என தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,இனி வரும் நாட்களில் உலக நாடுகளில் டெல்டா வகை கொரோனாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது, இந்த டெல்டா வகை கொரோனா 96 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.மேலும் இனி வரும் நாட்களில் இந்த டெல்டா கொரோனா தொற்று பரவல் அதிகம் இருக்கும் என
எச்சரிக்கப்பட்டுள்ளது.