தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேல் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றுவோர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் அன்னதானத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் 3,700 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதுகுறித்த பட்டியலை வெளியிட முடியுமா என கேள்வி எழுப்பினார்.
மேலும் கோயில் பணியாளர் நியமனம் குறித்த கேள்விக்கு , தமிழகத்தில் உள்ள கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேல் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றுவோர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.



