சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் வழங்கும் முறை !

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

கொரோனா தொற்றால் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மதிப்பெண் கணக்கீடு நடைபெற்று வருகிறது.

மேலும் மதிப்பெண் வழங்குவது தொடர்பான அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிபிஎஸ்இ தாக்கல் செய்துள்ள அந்த அறிக்கையில், 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை கணக்கில் கொண்டு மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு , 11ம் வகுப்புகளில் தலா 30 சதவீத மதிப்பெண்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்கள் என கணக்கிட செய்வதாக அறிவித்துள்ளது.தேர்வு முடிவுகள் ஜூலை 31ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.