கழுத்தை சுற்றியுள்ள கருமை மறைய இதோ இதை ட்ரை பண்ணுங்க !

பெரும்பாலும் பெண்களுக்கு கழுத்து பகுதியில் கருமையாக காணப்படும்.இதற்கு காரணம் கழுத்தில் அணியும் நகையால் கூட இருக்கலாம் மேலும் உடல் எடை அதிகமாக இருப்பதால் கூட கருமை வரலாம் என்று கூறுகின்றனர்.

சுலபமான முறையில் வீட்டில் இருந்தபடியே எப்படி போக்குவது எப்படி என்று பார்ப்போம்.முதலில் ஒரு துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து கழுத்தை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

கற்றாழையின் உள்ளிருக்கும் ஜெல் போன்ற பகுதியை திறந்து அதை கழுத்து முழுக்க தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

அடுத்தது சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன்,ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு,1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கலந்து கொள்ளுங்கள்.இதனை கழுத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து வெதுவெதுமான நீரில் கழுவ வேண்டும்.இப்படி செய்வதன் மூலம் கருமை மறைய நீங்களே காண்பீர்கள்.

உருளைக்கிழங்கு சாறு எடுத்து அதை முன் கழுத்து பின் கழுத்து பகுதியில் தடவி விடவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து மந்தமான நீரில் கழுவி எடுக்கவும் இதனை வாரம் ஒரு முறை செய்துவர கருமை நிறம் மாறிவிடும்.