அமெரிக்கா செல்லும் நடிகர் ரஜினிகாந்த் !

நடிகர் ரஜினிகாந்த் தனது மருத்துவ பரிசோதனைக்காக வரும் 19 ம் தேதி அமெரிக்கா செல்கிறார்.சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதன் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் பரிசோதனைக்காக நாளை மறுநாள் இரவு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அமெரிக்கா தனி விமானத்தில் செல்ல மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார்.தற்போது அந்த அனுமதி கிடைத்துள்ளது.அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனைக்காக செல்லும் ரஜினி 3 மாதங்கள் அங்கே தங்கலாம் என்று தெரிகிறது.