TN Students: தமிழக மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்டான மாணவர்களுக்கு மறுதேர்வு

TN Students: சென்னை மாநகராட்சியின் 2022-2023ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் பொதுமக்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மற்றும் அவர்களின் நல்வாழ்விற்காக பலவேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல்:

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் கல்வி கற்றலை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு உதவிகள் மற்றும் சிறப்பு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் அதிக ஊக்கத்துடன் பள்ளிக்கு வருகின்றனர். அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் 2022-2023ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல திட்டங்கள் உள்ளது. அதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 2022-2023-ம் கல்வியாண்டில் சென்னைப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 72,000 மாணவ, மாணவியருக்கு ரூ.7.50 கோடியில் விலையில்லா சீருடைகள் வழங்கப்படும்.

2022-2023ம் கல்வியாண்டில் 70 சென்னையில் உள்ள உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.186 கோடியில் இணைய இணைப்பு வழங்கப்படும். 281 சென்னை தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் விதமாக ரூ.40 லட்சம் செலவில் கண்காட்சி நடத்தப்படும். 2022-2023-ம் நிதியாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் 31 பள்ளிகளுக்கு வழங்கிய மண்டிச்சேரி உபகரங்களை சிறந்த முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை நடைமுறைப்படுத்துவதுடன், மேலும் இக்கல்வி முறை பிற மழலையர் வகுப்புகளில் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.

இதையும் படிங்க: Hindi imposition: “தமிழணங்கு”.. இந்தி திணிப்பின் பொட்டில் அடித்த ஏ.ஆர். ரஹ்மான்!