குடியரசு தினத்தையொட்டி போரிஸ் ஜான்சன் வாழ்த்து..!

இன்று 72-வது குடியரசு தினத்தையொட்டி, இந்திய மக்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் உலகின் மிகப்பெரிய இறையாண்மை கொண்ட ஜனநாயகம், இந்தியா. எனது நண்பர் பிரதமர் மோடியின் அன்பான அழைப்பின் பேரில் குடியரசு தின விழாவில் பங்கேற்க ஆவலாக இருந்தேன், ஆனால் கொரோனா காரணமாக பங்கேற்க முடியவில்லை.

இந்தியாவில் உள்ள அனைவருக்கும், இங்கு இங்கிலாந்தில் கொண்டாடும் அனைவருக்கும், மிகவும் மகிழ்ச்சியான குடியரசு தினமாக வாழ்த்துகிறேன் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.