மீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.88.60ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 33 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.81.47 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.