வனிதா விஜயகுமார் பிறந்தநாள் இன்று !

வனிதா விஜயகுமார் இந்த பெயரை தெரியாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது.சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குபவர்விஜய் டிவி யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.தற்போது தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் இன்று தனது 41 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.1995 ஆண்டு “சந்திரலேகா” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான வனிதா பின்பு மாணிக்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் செம பிரபலமானார்.அவரது பேச்சுக்காக அவருக்கு வத்திக்குச்சி என்ற பெயர் எழுந்தது.அதற்கு பின்பு பீட்டர் பால் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் திருமண வீடியோ யூடுபியில் வெளியானது செம வைரல் ஆனது.

அதன் பின்பு இந்த திருமணத்தால் பல சர்ச்சைகளில் சிக்கினார்.மேலும் சில மாதத்திற்கு பிறகு அந்த நபரை விவாகரத்து செய்தார்.தற்போது தமிழ் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என்று பிஸியாக இருந்து வருகிறார்.