சர்வதேச ஆசிரியர் தினம் இன்று !

உலக ஆசிரியர் தினம் அல்லது சர்வதேச ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 அன்று கடைபிடிக்கப்படுகிறது.1994 முதல் உலக ஆசிரியர் தினம் அறிவிக்கப்பட்டது.

இந்த நாள் ஆசிரியர்களுக்கு தேவையான பாராட்டு, மதிப்பீடு மற்றும் மாற்றங்களில் கவனம் செலுத்துகிறது மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும்ஒரு நாளாகும்.

இந்த நாள் ஆசிரியர்களை ஊக்குவிக்கவும் மற்றும் எதிர்கால தலைமுறையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆசிரியர்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.யுனெஸ்கோ மற்றும் கல்வி சர்வதேசம் ஒவ்வொரு ஆண்டும் உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஒரு பிரச்சாரத்தை நடத்துகின்றன. ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியில் அவர்கள் வகிக்கும் பங்கு பற்றி கூறிவருகிறது.எதிர்காலம் சிறந்து விளங்குவது மாணவர்கள் கையில் உள்ளது என்று கூறுகின்றனர் அந்த மாணவர்கள் சிறந்து விளங்க சிறந்த ஆசிரியர்கள் தேவை.

இதையும் படிங்க : வனிதா விஜயகுமார் பிறந்தநாள் இன்று !