‘பிக்பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு தொடக்கம்

பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கும் ‘பிக்பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு விஜய்டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

அதற்காகவே காத்திருக்கிறார்கள் நிகழ்ச்சியின் ரசிகர்கள். யாரெல்லாம் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துக்கொள்கிறார்கள் என்பதும் வெட்ட வெளிச்சமாக இன்னும் சில மணிநேரங்களே இருக்கும் தருணத்தில், விஜய் டிவி மேலும் ரசிகர்களின் பல்ஸை எகிறவைக்கும் விதமாக, பிக்பாஸ் சீசன் 4 வீட்டின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் பார்க்கும்போதே தெரிகிறது முன்பிருந்த சீசன் வீடுகளைப்போல் இல்லாமல், மேலும் ஆடம்பரமாக கண்ணைக்கவரும் வகையில் இருக்கிறது. அந்தளவிற்கு அழகுற வேலைப்பாடுகள் செய்துள்ளனர். ஒரு சில போட்டோக்களே கண்ணை கவருகிறதென்றால், இன்னும் முழுவீடும் எப்படியிருக்கிறது என எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த அழகு வேலைப்பாடுகளை வரும் போட்டியாளர்கள் எப்படி பாதுக்காக்கிறார்கள் என இனிவரும் நாட்களில் தெரிந்துவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.