மாமல்லபுரத்தில் பூதேவி உலோக சாமி சிலை மீட்பு

மாமல்லபுரம் அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலான பூதேவி உலோக சாமி சிலையை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மீட்டனர்.

விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டத்தச் சேர்ந்த வேல்குமார்(33), செல்வம்( 38) என்பது தெரியவந்தது. இந்த சிலையானது கோயிலில் இருந்து திருடப்பட்டு பல கோடி ரூபாய்க்கு விற்க கொண்டுச் சென்ற போது இருவரும் கைதாகினர்.இந்தச் சிலை எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என்றும் இவர்கள் யாரிடம் சிலையை விற்க சென்றனர் என பல்வேறு கோணங்களில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பின்னர் இருவரையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.