பொம்மையை திருமணம் செய்துகொண்ட பாடிபில்டர்

கஜகஸ்தானைச் சேர்ந்த யூரி டோலோச்ச்கோ என்ற பாடிபில்டர் இந்த ஆண்டு அதை நிரூபித்துள்ளார். யூரி டோலோச்ச்கோ தனது பாலியல் தேவைக்காக பயன்படுத்திய பொம்மையுடன் எட்டு மாதங்கள் டேட்டிங் செய்துள்ளார். கடந்த ஆண்டு அந்த பொம்மையை ப்ரொபோஸ் செய்தாராம். அதன்படி இந்த மாதம் அவர் இறுதியாக அந்த பொம்மையை திருமணமும் செய்திருக்கிறார்.

டோலோச்சோ, மார்கோ என்ற அந்த பொம்மையுடன் 8 மாதங்களுக்கும் மேலாக உறவு கொண்டிருந்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் திருமணத்திற்கு சம்மதித்தார். டோலோச்சோ, பாலியல் பொம்மைக்கு சில மாற்றங்களைச் செய்ய பொம்மையை கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றார். ஏனெனில் மார்கோ தோற்றம் திருமணத்திற்கு ஏற்றதாக இல்லையாம்.