இளநிலை படிப்பிற்கான சேர்க்கை குறித்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவிப்பு !

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்க மாநில அரசு ஊரடங்கை வரும் 14 ம் தேதி வரை அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் +2 தேர்வு நடக்குமா, நடக்காதா என்ற கேள்விக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு ஆயத்தமாக தொடங்கிவிட்டன.பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை சேர விண்ணப்பிக்கலாம் என்று பாரதிதாசன் பல்கலை. பதிவாளர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

+2 மதிப்பெண் வெளியான 15 நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் பல்கலை. தெரிவித்துள்ளது.பிளஸ் டூ தேர்வுக்கான மதிப்பெண் வழங்குவது குறித்து விரைவில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழு மாணவர்களுக்கான பிளஸ் 2 மதிப்பெண்களை முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.