கோவாக்சின் தடுப்பூசியால் விளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் – பாரத் பயோடெக் !

கரோனா தொற்று தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசியின் 55 லட்சம் டோஸ்களை அரசு வாங்க உள்ள நிலையில், இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட நபருக்கு ஏதேனும் மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டால், இழப்பீடு வழங்குவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி பெறுபவர்கள் கையெழுத்திடப்பட வேண்டிய ஒப்புதல் படிவத்தில், ஏதேனும் பாதகமான நிகழ்வுகள் அல்லது கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டால், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் / மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை வழங்கப்படும் என்று பாரத் பயோடெக் கூறியுள்ளது.

தடுப்பூசி காரணமாக பக்க விளைவு ஏற்பட்டது என நிரூபிக்கப்பட்டால், அதற்கான இழப்பீட்டை பாரத் பயோடெக் நிறுவனம் செலுத்தும் ”என்று ஒப்புதல் படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.