இளமை தோற்றத்தை தக்க வைக்க வேண்டுமா !

தோற்றம் என்பது அக மற்றும் புறம் இரண்டும் ஒன்று சேர்ந்து அமைய வேண்டும்.அக அழகை பாதுகாக்க நாம் நேர்மறையானா எண்ணங்கள் இருத்தல் போதுமானது.புற அழகையும் மட்டும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் தேவை.அதில் முக்கியமான ஒன்று எண்ணெய் மசாஜ் .இதில் பல அற்புதமான குணாதிசயங்கள் அடங்கி உள்ளது.

நல்லெண்ணெய் மசாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது.ஆயில் மசாஜ் செய்வதன் மூலமாக சருமம் தளர்வு நீங்கும்.மேலும் டென்ஷன்,உடம்பு வலி,உடல் சூடு நீங்கும் .ஆயுர்வேதத்தின் படி உடம்பின் சில புள்ளிகளில் அழுத்தத்தை கொடுக்கும் போது உடல் அமைதிப்படுகிறது.மற்ற எண்ணெய் பயன்படுத்துவதை விட நல்லெண்ணெய் மசாஜ் நம் வீட்டிலே செய்வது மிகவும் சிறந்தது.