அட நம்ம பொம்மியா இது !

தமிழ் சினிமாவில் ஒரே படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்ற நடிகர் நடிகையர் நிறைய உண்டு. சூரரைப்போற்று திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது அதில் பொம்மியாக நம் மனதை கவர்ந்தவர் அபர்ணா பாலமுரளி.இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் குவிந்தது.

அவரை குறித்த எந்த ஒரு செய்தி வெளியானாலும் அது வைரலாகிவிடுகிறது.அபர்ணாவை சமூகவலைத்தளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.தற்போது அபர்ணா நிகழ்ச்சி ஒன்றில் மெல்லிய குரலில் பாடல் பாடி அசத்திய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் அபர்ணாவின் அசத்தல் போட்டோக்கள் இன்ஸ்ட்டாகிராம் மற்றும் சமூகவலைத்தளங்களில் லைக் செய்யப்பட்டு வருகிறது .