இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸின் தந்தை காலமானார்

நியூசிலாந்து ரக்பி அணியின் முன்னாள் வீரரும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸின் தந்தையுமான கெட் ஸ்டோக்ஸ் மூளையில் ஏற்பட்ட புற்றுநோயால் இன்று காலமானார்.

இந்தத் தகவலை இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது.கெட் ஸ்டோக்ஸின் இறப்பு செய்தியறிந்த பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரக்பி வீரர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.