வாடிக்கையாளர்கள் எந்நேரமும் RTGS- ஐ பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியிருந்தார்.
RTGS மூலம் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வணிகர்கள் உள்ளிட்டோர் பணப்பரிமாற்றம் செய்து வந்தனர். இந்தமுறை மூலம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும். இல்லையென்றால், அடுத்தநாள் காலை 7 மணி வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. மேலும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் RTGS மூலம் பணம் அனுப்ப முடியாத நிலையும் இருந்தது.
இந்நிலையில், அக்டோபர் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த அறிவிப்பில், டிசம்பர் மாதம் முதல் ஆர்டிஜிஎஸ் சேவைகள் 24 மணி நேரமும் கிடைக்கும் என்று அறிவித்திருந்தது. வாடிக்கையாளர்கள் எந்நேரமும் RTGS- ஐ பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியிருந்தார்.