பாகுபலி நாயகன் பிரபாஸ் பிறந்தநாள் இன்று !

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவர் பிரபாஸ்.இவரை இந்தியா மற்றும் உலகமறிய செய்தது பாகுபலி என்ற பிரமாண்ட படம்.இந்த படத்திற்கு பிறகு பிரபாஸ் பாகுபலி என்றே அழைக்கப்பட்டார்.

2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் என்ற படம் மூலம் அறிமுகமானார்.அவரது திரைப்படமான பாகுபலி எல்லா காலத்திலும் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகும், அவரை இந்தியா முழுவதும் மிகவும் விரும்பப்படும் நடிகராக மாற்றியது.

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது.உலக புகழ்பெற்ற Madame tussauds wax மியூசியத்தில் இடம் பெற்றுள்ள பெருமை இவருக்கு உண்டு.