தமிழக மக்கள் கவனத்திற்கு..இன்று நடைபெறுகிறது 6 வது மெகா தடுப்பூசி முகாம் !

corona-vaccine-for-12-to-14-yrs-group
கொரோனா தடுப்பூசி

கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.


தமிழகம் முழுவதும் இன்று 5ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.இது வரை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தமிழகத்தில் 6-வது கட்டமாக இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 1,600 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 2.5 லட்சம் கோவிட் -19 தடுப்பூசி மருந்துகளை செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இந்த முகாமில் 600 செவிலியர்கள் உட்பட மொத்தம் 16,000 சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இந்த முகாம்களை பயன்படுத்தி மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !