கேரளா மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது.இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வியாழனன்று கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்தது, எட்டு மாவட்டங்கள் மிக அதிக மழைக்காக ஆரஞ்சு எச்சரிக்கையில் வைக்கப்பட்டன.
பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமாக உள்ளது. மாநிலத்தில் பெரும்பாலான இடங்களிலும், லட்சத்தீவில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
அக்டோபர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் கேரளாவின் தென்-மத்திய மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்பட்டது. ஆரஞ்சு எச்சரிக்கை என்பது 6 செமீ முதல் 20 செமீ வரை மிகக் கனமழையைக் குறிப்பதாகும்.
இதையும் படிங்க: தமிழக மக்கள் கவனத்திற்கு..இன்று நடைபெறுகிறது 6 வது மெகா தடுப்பூசி முகாம் !



