வைரல் ஆகும் அரோரா அஸ்ட்ராலிஸ் வெளிச்சம் !

ஆஸ்திரேலியாவில் இரவு நேரத்தில் உருவான அற்புதமான அரோரா வெளிச்சத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தி வருகிறது.

பூமியின் வட மற்றும் தென் துருவங்களான ஆர்க்டிக் மற்றும் அண்டார்ட்டிக் பகுதிகளில் தோன்றும் காண்பதற்கு அரிய ஒளித்தோற்றம் அரோரா என அழைக்கப்படுகிறது. இந்த வெளிச்சம் தென் துருவத்தில் தோன்றினால் அரோரா அஸ்ட்ராலிஸ் எனவும் அழைக்கப்படுகிறது.

அந்த வகையில், ஹாபர்ட் நகரில் தோன்றிய அரோரா அஸ்ட்ராலிஸ் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் பிரமிப்பாக காட்சி அளிக்கிறது.