ப்ராக்கோலியில் இருக்கும் மருத்துவ நன்மைகள் தெரியுமா !

ப்ராக்கோலி, இது முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த ஒரு காய்கறியாகும்.இதில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது.இதில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றது.

ப்ராக்கோலியில் அதிக நார்ச்சத்துப் பொருள்கள் இருப்பதால் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன.இதில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடண்ட் பண்புகள் நம் உடலுக்கு நன்மை சேர்கிறது.

ப்ராக்கோலியில் அதிக கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. அதனால் இது எலும்பு வளர்ச்சிக்கு சிறந்த பொருளாக இருக்கும்.இதில் இருக்கும் பண்புகளால் புற்றுநோய்க்கு எதிரி என்று கூறப்படுகிறது.

ப்ராக்கோலியில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை இருக்கின்றன.இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க இது உதவுகிறது.எனவே வாரத்தில் 2 முறை ப்ராக்கோலி உணவில் சேர்த்து கொள்வோம்.