அசாமில் பயங்கர வெள்ளம் ..காசிரங்கா தேசியப் பூங்காவில் அரியவகை உயிரினங்கள் உயிரிழப்பு !

அசாம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.மேலும் இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அசாமின் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 24 காட்டு விலங்குகள் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூங்கா இருக்கும் பகுதியில் வெள்ளநீர் அதிகமாக உள்ளது.பூங்காவின் குறைந்தது 30 சதவிகித பகுதிகள் இன்னும் நீருக்கடியில் இருப்பதாக பூங்கா ஆணையம் தெரிவித்துள்ளது.

பூங்காவில் உள்ள 223 வேட்டை தடுப்பு முகாம்களில் 21 தற்போது நீரில் மூழ்கியுள்ளன.இந்த விபத்தில் 24 விலங்குகள் உயிரிழந்துள்ளன.இறந்தவைகளுள் ஒரு காண்டாமிருகம், மூன்று பன்றி மான், ஒரு காட்டு எருமை, ஒரு மான் உள்ளிட்ட ஆறு விலங்குகள் பூங்காவில் வெள்ள நீரில் மூழ்கின.

மேலும் தேசியப் பூங்கா வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 37 இல் வாகனத்தில் மோதியதில் ஒன்பது மான், ஒரு மலைப்பாம்பு மற்றும் ஒரு லங்கூர் உள்ளிட்ட 11 விலங்குகள் இறந்தன என்று காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.