கொரோனா தொற்று காரணமாக ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.மாணவர்களின் நலன் கருதி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெற்றன.
மேலும் செப் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரியில் 2 ம் ஆண்டு முதல் பயிலும் மாணவர்களுக்கும், முதுகலை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கியது.
தற்போது இன்று முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியுள்ளது.மேலும் மாணவர்கள் தடுப்பூசி போடப்பட்டதை உறுதி படுத்தவேண்டும்.மேலும் கல்லூரிகளில் சமூக இடைவேளை மற்றும் முகக்கவசம் அணிவது போன்றவற்றை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மத்திய அமைச்சரின் மகனுக்கு எதிரான கொலை வழக்கு பதிவு !



