உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் ஓட்டியதாக கூறி உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
மேலும் பல முக்கிய நபர் பெயர்களில் எஃப்.ஐ.ஆர் பெயரிடப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவத்தில் நான்கு உழவர் உள்ளிட்ட எட்டு பேர் இறந்ததாக லக்கிம்பூர் கெரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமார் சௌராசியா கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நேற்று மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் காரில் சென்றபோது விவசாயிகள் கறுப்புக் கொடி காட்ட முயற்சித்துள்ளனர்.அப்போது விவசாயிகள் மீது அமைச்சரின் மகன் காரை ஏற்றியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த விவசாயிகள் அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் காரை தீயிட்டும் கொளுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதற்கு பின்பு நடந்த கலவரத்தை தடுக்க போலீசார் தடியடி நடத்தி உள்ளனர்.இதில் மேலும் 4 விவசாயிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !



