Army helicopter crash: ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து 4 பேர் உயிரிழப்பு

Army helicopter with
ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து 4 பேர் உயிரிழப்பு

Army helicopter crash: நீலகிரி மாவட்டம், குன்னூரில் ராணுவ உயரதிகாரிகளுடன் சூலூரிலிருந்து வெலிங்டனுக்கு சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குளானது.

குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது அதிக மேகமூட்டமாக இருந்ததால் ஹெலிகாப்டர் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து 4 பேர் உயிரிழப்பு

ஹெலிகாப்டரில் ராணுவ உயரதிகாரி ஒருவர் உட்பட மொத்தம் 14 பேர் பயணித்ததாகவும் கூறப்படுகிறது. இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் முன்னதாக தகவல் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 4 பேர் விபத்தில் உயிரிழந்ததாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.


ஹெலிகாப்டரில் பயணித்த மற்றவர்களின் நிலை குறித்து தெரியவில்லை.

இதையும் படிங்க: Holiday Announcement : மாணவர்களுக்கு வரும் 15-ஆம் தேதி விடுமுறை..!\

(Army chopper crashes in Tamil Nadu, CDS Gen Bipin Rawat was on board)