Holiday Announcement : மாணவர்களுக்கு வரும் 15-ஆம் தேதி விடுமுறை..!

holiday announcement
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Holiday Announcement:: திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 15-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 15-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அந்த விடுமுறை நாளை சரிசெய்யும் பொருட்டாக அடுத்த மாதம் 8-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் (Thiruvarur District) முத்துப்பேட்டையில் உலக புகழ்பெற்ற தாவூத் காம் தர்கா அமைந்துள்ளது. அங்கு இஸ்லாமிய சூபியான ஒலியுல்லாஹ் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்ச்சி வரும் 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது .

இதையும் படிங்க: IPL 2022: பெங்களூர் அணியில் டேவிட் வார்னர்..!

இந்த நிகழ்வை காண வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வர்.கந்தூரி விழக் கொடியானது ஊர்வலமாக புறப்பட்டு பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், ஆசாத் நகர் வழியாக சென்று மீண்டும் தர்காவை அடைந்து கொடி ஏற்றப்பட்டது.

முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி வரும் 15ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக ஜனவரி 8ஆம் தேதி வேலை நாளாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 710 பேருக்கு கொரோனா !

தமிழகத்தில் இன்று 710 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,00,149. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 27,31,945.

இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 10 பேர் உயிரிழந்தனர். 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 128.இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 69,21,015 பேர் வந்துள்ளனர்.tn corona cases

தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 246 தனியார் ஆய்வகங்கள் என 315 ஆய்வகங்கள் உள்ளன.இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,87,414.

இதையும் படிங்க: Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல் விலை நிலவரம்

இதையும் படிங்க: sasikala meets rajinikanth: சசிகலா ரஜினி சந்திப்பு !

இதையும் படிங்க: CEO fires over 900 employees: 900 ஊழியர்கள் பணி நீக்கம் !

(Holiday Announcement : 15th holiday for students)